செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (10:52 IST)

ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே! – கமல்ஹாசன் காதலர் தின ட்வீட்!

இன்று உலக காதலர் தினம் கொண்டாட்டப்படும் நிலையில் காதலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இன்று பிப்ரவரி 14ம் தேதி உலக காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதுடன், பொது இடங்களில் சந்தித்தல், பரிசுகளை வழங்குதல் என காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காதலர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.” என்று கூறியுள்ளார்.