1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:30 IST)

இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி.. சென்னை பாண்டி பஜாரில் ரோட் ஷோ..!

Modi
பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் தமிழகத்திற்கு வர இருக்கிறார் என்பதும் சென்னை பாண்டி பஜார் முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை அவர் ரோடு ஷோவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரதமர் மோடி சமீப காலமாக ஐந்து முறை தமிழகத்திற்கு வந்த நிலையில் இன்று ஆறாவது முறையாக அவர் தமிழ்நாடு வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் அவர் இன்று சென்னையில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்ள இருக்கிறார்

சென்னை தி நகரில் தொடங்கும் வாகன பேரணியில் பங்கேற்கும் அவர் அந்த பேரணி முடியும் தேனாம்பேட்டை சிக்னல் வரை வர இருக்கிறார் என்பதும் இதற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து அவர் வேலூர், நீலகிரி ஆகிய பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva