1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:02 IST)

பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்!

Modi
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஏற்கனவே 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக- தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணி  மீண்டும் வெற்றி பெற தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
 
வரும் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர்மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இதற்கிடையே பிரதமர் மோடி ராணுவ விமானங்களை பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்தது.
 
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
 
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி ராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் காட்சி புகார் அளித்துள்ளது.
மேலும், காங்கிரச் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் கட்சியின் சிந்தனைகள் பிரதிபலிப்பதாகக் கூறி பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருவதற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளது.
 
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.