திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (16:33 IST)

தேவர் குருபூஜைக்காக பிரதமர் மோடி தமிழகம் வரவில்லை: அண்ணாமலை

annamalai
தேவர் குரு குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்தி தவறானது என்றும் அக்டோபர் 30-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
அக்டோபர் 30-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்
 
எங்களை பொறுத்தவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் அவரது குரு பூஜையில் நாங்கள் கலந்து கொள்ள விரும்புகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர இருக்கிறார் என்ற செய்தி எங்கிருந்து கிளம்பியது என்று எனக்கு தெரியவில்லை என்றும் பிரதமரின் பயணத் திட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வகுக்கப்படும் என்பதால் பிரதமர் தமிழகம் வருவதற்கான திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என்றும் எனவே அவர் தமிழகம் வரவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதாக கூறப்பட்ட செய்தி வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran