1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (19:21 IST)

இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi
இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறித்துதான் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2014ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் போது உலக அளவில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார் 
 
பத்தாவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை தற்போது பாஜக அரசு ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார் 
 
பாஜக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய பொருளாதாரம் முன்னேறி உள்ளது என்றும் மேலும் இந்திய பொருளாதாரத்தை முதலாவது இடத்திற்கு விரைவில் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva