திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:24 IST)

பிரதமருக்கு நன்றி சொன்ன நாமக்கல் மாணவியின் குடும்பத்தினர்!

பிரதமருக்கு நன்றி சொன்ன நாமக்கல் மாணவியின் குடும்பத்தினர்!
பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மான் கீ பாத் உரை நிகழ்த்தியபோது ஏழை குடும்பத்தில் பிறந்து மருத்துவராகும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவி கனிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் 
 
சிபிஎஸ்சி வகுப்பு தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்த நாமக்கல் மாணவி கனிகாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தது மட்டுமின்றி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவரிடம் பேசி பல விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கனிகாவின் சகோதரி ஷிவானி என்பவரும் மருத்துவம் படித்து வருவதை அறிந்து பாராட்டிய பிரதமர் மோடி ஏழை குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் நாட்டுக்கு தோன்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார் 
பிரதமர் இந்த பாராட்டுக்கு கனிகாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பிரதமரே தனது மகள்களுக்கு பாராட்டு தெரிவித்ததை எண்ணி பெருமைப்படுவதாக கனிகாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.