1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:02 IST)

இன்று முதல் ஒரு மாதம் பரோல் – வெளியே வரும் பேரறிவாளன் !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று முதல் மாதம் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரில் பேரறிவாளனும் ஒருவர். அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம் அம்மாள் 28 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் பேரறிவாளன் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த சிறைத்துறை அதிகாரிகள் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர் 

இதனையடுத்து அவர் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து வரும் இன்று அவர்  பரோலில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரோலில் செல்லும் பேரறிவாளன் சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்றும் அவ்வாறு விதிகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை ஏற்று பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.