வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:09 IST)

துப்புரவு பணியாளராக அவதாரம் எடுத்த காவலர்! – பாராட்டும் மக்கள்!

Police
கோவையில் கனமழை பெய்த நிலையில் காவலர் ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த காட்சி வைரலாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

கோவையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் கோவையில் பெய்த கனமழையாக் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகள் சேர்ந்து நீர் வெளியேற முடியாதபடி கிடந்துள்ளது.

இதைக் கண்ட காவலர் ஒருவர் கழிவுநீர் கால்வாய் அருகே தேங்கிய குப்பைகளை அகற்றி நீர் செல்ல வழி ஏற்படுத்தினார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் காவலரின் செயலை பாராட்டி வருகின்றனர்.