ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (11:27 IST)

தேர்தலுக்கு பின் திமுக, பாஜகவுடன் சேர்ந்துவிடும். டிடிவி தினகரன் எச்சரிக்கை

தேர்தல் ஆணையம் கொடுத்த பரிசுப்பெட்டி சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சென்ற சந்தோஷத்தில் டிடிவி தினகரன் நேற்று வேலூர் தொகுதியில்  போட்டியிடும் அமமுக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 
 
திமுக வேட்பாளரான தனது மகனை இந்த தொகுதிக்கு தத்து கொடுப்பதாக முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் சொல்கிறார். மக்களாகிய நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 7 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. திமுக ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடை, பியூட்டி பார்லர் ஆகியவற்றை அடித்து நொறுக்குகின்றனர். 
 
ராகுல் காந்திக்கு பிரதமராக முதிர்ச்சியில்லை என்று கூறிய ஸ்டாலின் தற்போது ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று பேசுகிறார். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இங்கு திமுக வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் திமுகவினர் மோடி பக்கம் சென்றுவிடுவார்கள். அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள். அதனால் தான் 10 ஆண்டுகள் அட்டை போல் காங்கிரசை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். அப்போது நடந்த இலங்கை படுகொலையை கூட அவர்கள் வாய் திறந்து ஏன் என கேட்கவில்லை. ஆகவே மக்களுக்கு நன்மை செய்யும் மாநில கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.