1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:45 IST)

தனிச்சின்னம் அல்லது தனித்து போட்டி: பாரிவேந்தர் எம்பி உறுதி!

தனிச் சின்னம் அல்லது தனித்து போட்டி என்ற முடிவை எடுப்போம் என திமுக கூட்டணியில் உள்ள பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் உள்பட ஒருசில கட்சிகள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கும் நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான பாரிவேந்தர் அவர்களின் கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளது 
 
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் இல்லை என்றால் தனித்து போட்டியிடுவோம் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் அவர்கள் உறுதிபட கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று குரலெழுப்பி வருவதால் இந்த சிக்கலுக்கு திமுக தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்