புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (09:18 IST)

தவறு செய்தவர்களின் பெற்றோர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: தமிழிசை

பாலியல் குற்றத்திற்கு தூக்குத் தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் என்றும், தவறு செய்த குற்றவாளிகளின் பெற்றோர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
 
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'பாலியல் குற்றத்திற்கு தூக்குத் தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும். பொள்ளாச்சி சம்பவம் எல்லோர் மனதினையும் உருக்கிக் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி மாற்றப்பட்டு இருந்தால் உண்மையில் வரவேற்கத்தக்கது. 
 
பாலியல் செயலில் ஈடுபட்டவர்கள் எந்த குடும்பத்தினரை சேர்ந்து இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்களின் பெற்றோர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது வரவேற்கக்கூடியது, பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.
 
பொள்ளாச்சி சம்பவம் குறித்து பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியபோது, 'பெற்றோர்கள் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும் என்றும், சிறு வயதிலேயே பெண்களை மதிக்க பெற்றோர்கள் கற்று கொடுக்க வேண்டும் என்றும், தற்காலத்தில் பெற்றோர்கள் இருவரும் பணம் பணம் என்று அலைந்து வேலைக்கு செல்வதால் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால் அவர்களும் ஒருவகையில் குற்றவாளிகளே என்று கூறி வருகின்றனர்.