பண்ருட்டி ராமச்சந்திரன் முதல்வர் ஆவாரா?


sivalingam| Last Modified புதன், 23 ஆகஸ்ட் 2017 (23:57 IST)
அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்க தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் எண்ணமில்லை. சொளையாக 4 ஆண்டுகள் பதவி இருக்கும்போது அதை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்.


 
 
இந்த நிலையில் தினகரன் தரப்பினர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான். சபாநாயகர் தனபால் முதல்வர் வேட்பாளர் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறியபோதிலும் தனபால் இதை கொஞ்சமும் ரசிக்கவில்லை. எனவே அவர் முதல்வர் பதவிக்கு போட்டியிட மாட்டார் என்றே கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மூத்த அதிமுக தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை முதல்வர் ஆக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. தினகரன் ஆதரவாளர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முதல்வர் பதவியை இழப்பதைவிட விட நாமே பண்ருட்டி ராமச்சந்திரனை முதல்வர் ஆக்கிவிட்டால் என்ன? என்று அதிமுகவின் ஒரு பிரிவினர் கோரி வருகின்றார்களாம்.
 
ஆனால் இந்த கோரிக்கைக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் ஆட்சி பறிபோகும் நிலை வந்தால் வேறு வழியின்றி எடப்பாடியார் ஒப்புக்கொள்ளும் நிலை வரும் என்று கூறப்படுகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் இனி என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :