போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு! – பள்ளிகளுக்கு புதிய உத்தரவு!
தமிழ்நாட்டில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை பள்ளிகளில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து வரும் ஆகஸ்டு 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவௌம், மாணவர்களை போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மேற்கொள்ள செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை காலை 10.30 மணி அளவில் மாணவர்கள் உறுதி மொழி மேற்கொள்ள வேண்டுமென்றும், உறுதி மொழி மேற்கொண்டது குறித்த விவரங்களை நாளை பிற்பகலுக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.