வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (21:18 IST)

வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார் பழனிசாமி!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

mk stalin
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடக்கவுள்ளது.  இதற்காக  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின்   வாக்கு சேகரித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது; '’பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உரிமைத்தொகையை ஸ்டாலிந்தான் அண்ணன் தான் கொடுத்தார் என்றுதான் தமிழ்நாட்டு மகளிர் சொல்வார்கள் என்று கூறினார்.
 
மேலும், பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் ஊட்டப்பட்டு எங்கெங்கும் மதக் கலவரம் என்ற நிலை உருவாகும்.  படிப்பதால் உரிமை கேட்கின்றோம் என்பதால் கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களை சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை பொய்களால் மாற்றி எழுதுவார்கள்...ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு, ஒரே அரசியல் கட்சி ஒரே கட்சி தலைவர் என ஒரே ஒரே என்று நாட்டை நாசம் செய்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.