திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (19:17 IST)

டாஸ் வென்ற ஐதராபாத்.. பேட்டிங்கில் களமிறங்கும் சிஎஸ்கே.. இரு அணியிலும் என்னென்ன மாற்றங்கள்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இரு அணிகளும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை நட்சத்திர பந்துவீச்சாளர் பத்திரனா இன்றைய போட்டியில் இல்லை. அதேபோல் முஸ்தாபிசிர் அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் காயத்திலிருந்து மீண்டும் நடராஜன் மீண்டும் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார். இரு அணிகளில் இன்று விளையாடும் வீரர்களின் முழு விவரங்கள் இதோ:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருத்ராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மொயின் அலி, மிட்செல், ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மஹிஸ் தக்‌ஷீனா

சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

அபிஷேக் சர்மா, மார்க்கம், கிளாசன், அப்துல் சமது, பேட் கம்மின்ஸ், புவனேஷ் குமார், மயங்க் மார்க்கண்டே, நிதிஷ் குமார் ரெட்டி, உனாகட், நடராஜன்,

Edited by Siva