வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (10:21 IST)

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு – ப சிதம்பரம் கைதா?

கடந்த 2009-2014 மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராகப் பணியாற்றியவர் ப சிதமபரம். அப்போது அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஏர்செல் நிறுவனத்திற்கு  சட்டவிரோதமாக ரூ 3500 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து பாஜக ஆட்சியில் அந்த புகாரின் மீதான விசாரணை சூடு பிடித்தது. சிபிஐ தனியாகவும் அமலாக்கத்துறை தனியாகவும் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் முன் ஜாமீன் கோரியிருந்த ப சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நவம்பர் 1-ந்தேதி(இன்று) வரை முன் ஜாமீன் அளித்து சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் இருவரையும் கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது. நேற்று முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடிபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்ட பதிலில் ‘ப சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பித்து வருகிறார். அதனால் அவரை எங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கை சம்மந்தமான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. ஒருவேளை அமலாக்கத்துறையின் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் ப சிதம்பரம் கைது செய்யப்படலான் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.