1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (16:17 IST)

ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம்; பாகுபலி வசனம் பேசி உரையை முடித்த ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனம் பேசி உரையை முடித்துள்ளார்.

 
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாகுபலி வசனம் பேசி அசத்தியுள்ளார். லோக் ஆயுத்தா மசோதா நிறைவேற்றத்துக்கு பின் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பேசினார்.
 
சேலம் 8 வழி சாலைக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் தானாக முன்வந்து தங்கள் நிலங்களை வழங்கி வருகின்றனர். இது மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிநடத்திய கட்சி இது. அவரின் வழியை பின்பற்றிதான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நமக்கு துரோகம் செய்தவர்களை நாமே சூரசம்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டளை படி எதிரிகளை அழிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனத்தை கூறி உரையை முடித்தார்.