திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (19:37 IST)

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம்: மதுரை மாணவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம்: மதுரை மாணவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து
உயிர்காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்போது சில சமயம் ட்ராபிக் காரணமாக தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கு மற்ற வாகனங்கள் உடனடியாக வழிவிட்டாலும் சிக்னல் காரணமாக சில சமயம் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் உள்ளது.
 
இந்த நிலையில் மதுரை மாணவர்கள் இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளனர். தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் என்ற ஒரு தொழில்நுட்பத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தாமதமாவது தவிர்க்கப்படும் என்று அவர்கள் உறுதி செய்துள்ளனர் 
இந்த கண்டுபிடிப்புக்கு அவரது பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை மாணவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்திட "தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை" உருவாக்கியுள்ள மதுரை மாவட்டம், மேலூரைச் சார்ந்த இரட்டை சகோதர மாணவர்கள் பாலச்சந்தர், பாலகுமாரின் சமூகஅக்கறையும் அறிவியல் ஆர்வமும் நெகிழ வைக்கிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.