தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தாலே பாஸ்: அரியர் மாணவர்களுக்கு அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை
தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தாலே பாஸ்:
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தேர்வு கட்டணம் எழுதியிருந்தால் தேர்ச்சி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளிலும் தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவித்திருந்தார்
தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து அண்ணா பல்கலைக்கழகமும் இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல்-மே செமஸ்டர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் பாஸ் என்று அறிவிக்கப்படும். இதில் அரியர் வைத்திருப்பவர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அரியர் வைத்துள்ள மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கும் முந்தைய தேர்வு முடிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் இன்டர்னல் மற்றும் முந்தைய தேர்வு முடிவுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
இதனை அடுத்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதாமல் பாஸ் ஆகிவிட்டதை அறிந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர்