தமிழ் சினிமாவில் 800 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ள நிறுவனம்… எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் படம்!
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போதைக்கு தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலரை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
2010 ஆம் ஆண்டு எந்திரன் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதன் பின் ஆட்சி மாறியதும் சில காலம் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தது. இப்போது மீண்டும் படுவேகமாக படங்களைத் தயாரித்து வருகிறது.
இப்போதைய நிலவரத்தில் ரஜினியை வைத்து அண்ணாத்த, விஜய் ஏ ஆர் முருகதாஸ் படம், சூர்யா பாண்டிராஜ் படம், தனுஷ் படம், ராகவா லாரன்ஸின் திரைப்படம் என ஏகப்பட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளது. இந்த எல்லா படங்களின் பட்ஜெட்டும் சேர்ந்து 800 கோடிக்கு மேல் தேறும் என சொல்லப்படுகிறது.