1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (08:58 IST)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரிவு அதில் சேர்க்கப்பட்டுள்ளது
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு , சபரிராஜன் , வசந்தகுமார் , சதீஷ்குமார் உள்பட கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று பிரிவுகளுடன் தற்போது கூடுதலாக கற்பழிப்பு வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.
 
மேலும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று சமீபத்தில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, சிபிஐ தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததால் சிபிசிஐடி விசாரணை செய்து வருவதாகவும், சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் தமிழக அரசு பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது