11 மணி நேர விசாரணை : 3 குழந்தைகளை விற்ற தரகர் கணவருடன் கைது

namakkal
Last Modified வியாழன், 25 ஏப்ரல் 2019 (17:51 IST)
3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா தற்போது போலீஸாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். அதில் பல பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளன.
விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரும் தரகருமான அமுதவிடம் எஸ்.பி அருளரசு இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.
 
அதில் அமுதா வாக்குமூலமாகக் கூறியுள்ளதாவது :
 
2 குழந்தைகளை கொல்லிமலையிலும், ஒரு குழந்தையை சேலம் அன்னதானப்பட்டியிலும் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் குழந்தைகளை வாங்கிய விவரம், யார் யாரிடம் விற்றார் என்பது பற்றி மாவட்ட எஸ்.பி அருளரசு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதில் சேலம் ஓமலூரில் சட்ட விதிப்புறைப்படி ஒரு குழந்தையை தத்துக்கொடுத்துள்ளதாக அமுதா தெரிவித்தார்.
 
தற்போது 11 மணிநேர விசாரணைக்குப் பின்னர் எஸ்.பி அருளரசு தலைமையிலான போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் நாமக்கல் ராசிபுரத்தில் அமுதாவையும் அவரது கணவர் ரவிச்சந்திரனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :