ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (10:20 IST)

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து: பாதுகாப்பு இல்லை என்பதால் முடிவு

தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என்றும், மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதன் காரணமாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட பல நகரங்களுக்கு செல்லும் மக்களும் திண்டாடி வருகின்றனர். 
 
ஏற்கனவே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran