ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (07:46 IST)

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் எதிரொலி; சிறப்பு ரயில்கள் முழு விவரங்கள்..!

Train
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் இருப்பதை எடுத்து இந்தியன் ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முழு தகவல்களை தற்போது பார்ப்போம்


07113/07114 என்ற சிறப்பு ரயில் காக்கிநாடா நகரில் இருந்து இம்மாதம் 28, ஜனவரி 4, 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து இம்மாதம் 30, 6, 13, 20 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு காக்கிநாடா சென்றடையும்.

07009/07010 என்ற சிறப்பு ரயில் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில்  கோட்டயத்தில் இருந்து ஜனவரி 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, இரண்டாவது நாள் காலை 5 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெலுங்கு மாநிலங்களில் இருந்து 51 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் எண்கள் மற்றும் தேதிகள் ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Edited by Siva