முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு விழா
கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு விழா நடைபெற்றது.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நுாற்றாண்டு பழைமை வாய்ந்த கரூர் நகராட்சி குமரன் பள்ளி ஆரம்பகாலத்தில் துவக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த சிலவருடங்களுக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு அரசு துறை, மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு விழா இன்று நடைபெற்றது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினர்.
மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரஸ்பரத்தை பகிர்த்து கொண்டனர். அதே போல் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கினர். இதன் ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வேலுச்சாமி, மருதநாயகம், பாஸ்கரன், சையது, வெங்கடேஸ் ஆகியோர் இந்த சந்திப்பு விழாவை ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.