விஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்; உண்மையை சொன்ன ரஜினிகாந்த்!!

cap
Last Modified வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (11:57 IST)
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில், ரஜினிகாந்த் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார் என செய்து வந்ததும், இது அரசியல் சம்மந்தமான சந்திப்பு தான் என பல்வேறு யூகங்கள் கிளம்பியது.
su
இதற்கிடையே விஜயகாந்தை சந்நித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், நண்பர் விஜயகாந்த் நல்ல மனிதர். எனது உடல் நலம் சரியில்லாதபோது, என்னை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் சொன்ன முதல் நபர் கேப்டன். மற்றொரு முறை என் உடல் நலம் சரியில்லாதபோது எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார்.
 
தற்பொழுது அவர் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று வந்துள்ளார். அவர் நன்றாக இருக்கிறார். இந்த சந்திப்பில் துளியளவும் அரசியல் இல்லை. கேப்டனின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன் என ரஜினி கூறிவிட்டு சென்றார்.


இதில் மேலும் படிக்கவும் :