புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (08:51 IST)

ஓ பி எஸ் மகன் கார் முற்றுகை : காரை நிறுத்தாமல் சென்ற எம்.பி ! தேனியில் பரபரப்பு !

தேனியில் நடக்க இருந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்ற எம். பி ரவீந்தரநாத்தின் காரை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா அதிமுக அரசால் மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதில் கலந்து கொள்ள தேனி மாவட்ட எம் பி ரவீந்தரநாத் கம்பம் வ உ சி திடலில் நடக்க இருந்த விழாவில் கலந்து கொள்ள இருந்தார்.

அப்போது அவரது கார் சென்ற பகுதியைச் சுற்றி இருபுறமும் நின்று கொண்டிருந்த இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அவரது காரை முற்றுகை யிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் போலிஸாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இந்த நேரத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார்  எம் பி ரவீந்தரநாத். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.