செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (19:40 IST)

கருக்கலைப்பு மருந்து விற்பனை செய்த பிளிப்கார்ட்-அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஆன்லைனில் கருக்கலைப்பு மருந்து விற்பனை செய்த பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
இந்தியாவின் நம்பர் ஒன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற அளவில் அனைத்து பொருள்களும் கிடைத்து வருகிறது 
 
உணவுப் பொருள்கள் முதல் மருந்து பொருட்கள் வரை மொபைல் டிவி உள்பட அனைத்து பொருள்களையும் பலர் இந்த இரண்டு தளங்களில் தான் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஆன்லைனில் கருக்கலைப்பு மருந்துகளை விட அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் விற்பனை செய்ததை அடுத்து அந்நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு முன் மும்பை நாக்பூர் புனே உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது