1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (15:51 IST)

ரஜினி போல போஸ் கொடுத்த இளம் நடிகை!

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட அவரின் சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் நடித்து வரும் நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பழையகால ரஜினியின் கட் அவுட் ஒன்றுக்கு அருகில் நின்று அவர் போலவே போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.