புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (07:47 IST)

4 தொகுதி இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
 
இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் ஏப்ரல் 29-ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன்பின்னர் மே 2-ஆம் தேதி  இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். மே 19ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவும், தினகரனின் அமமுகவும் இன்று நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளது. 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், சூலூரில் பொங்கலூர் பழனிசாமி மற்றும் ஒட்டப்பிடாரத்தில் எம்சி சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் புதிய கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க களமிறங்கவுள்ளன.