புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c.anadakumar
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:46 IST)

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மல்லிகா சுப்புராயனுக்கு இடம் இருக்கா ?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல், தேர்தல் வரலாற்றிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த இரண்டாவது இடைத்தேர்தல் என்பதும், இந்திய தேர்தல் ஆணையத்தினாலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே நிறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அப்போதைய அமைச்சராக இருக்கும் போது, இதே தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரான செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரச்சாரம் செய்து அவரை ஜெயிக்க விட்ட நிலையில், செந்தில் பாலாஜியோ, ஜெயித்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து டி.டி.வி தினகரன் அணிக்கு மாறியவுடன் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தி.மு.க விற்கு சென்று மீண்டும் அதே தொகுதியில் தி.மு.க விற்கு நிற்கின்றார். இந்நிலையில், அ.தி.மு.க கட்சியோ விரைவில் வேட்பாளர் அறிவிக்க உள்ளதாக சேலத்தில் இன்று அக்கட்சியின் முதல்வரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக அங்கம் வகித்து வரும் மல்லிகா சுப்புராயன் (வயது 57)., இவரை அக்கட்சி அறிவிக்க வேண்டுமென்று அ.தி.மு.க வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
 
மேலும், அரவக்குறிச்சி தொகுதிக்கு பெண் எம்.எல்.ஏ என்று ஒருவர் இருந்ததே இல்லை. 20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் இருந்த நிலையில் 1991 லிருந்து இன்று வரை எந்த கட்சியும் பெண் வேட்பாளர்களை நிறுத்தியதில் இல்லை. இந்நிலையில். 1984 லிருந்து 1994 வரை சத்துணவு அமைப்பாளராக இருந்து வந்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தனூர் பகுதியை சார்ந்த மல்லிகா சுப்புராயன், அரவக்குறிச்சி ஒன்றிய மகளிரணி செயலாளராக, முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நேரடியாக களப்பணியாற்றியமைக்காக, இந்த பெண்மணிக்கு மீண்டும் கழகப்பணியாற்ற பதவி கொடுத்தார். 
 
கொடுத்தவுடனேயே, தனது சொந்த அரசு வேலையான சத்துணவு அமைப்பாளர் வேலையை விட்டு விலகியவர், அதே போல, தலைமை செயற்குழு உறுப்பினராக முதன்முறையாக தேர்வு செய்த பெண்மணிகளில் 21 ல் இவர் ஒருவர் ஆவார். இப்படி இருக்க, கடந்த 1994 ம் வருடம் ஜெயலலிதா அவர்களை தவறாக விமர்சித்ததற்காக, நக்கீரன் இதழ் எரிப்பு மற்றும் 1998 ல் திருநெல்வேலி மாநாட்டில், மாவட்ட மகளிரணி செயலாளராக பதவி உயர்வு பெற்று சீரிய தொண்டாற்றினார். 
 
இந்நிலையில், அதே அம்மாவின் காவிரி உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில், அவருடனே உண்ணாவிரதத்தில் பங்கேற்றது என்று இதுவரை அ.தி.மு.க கழகத்திற்காக குடும்பத்தினையும் பாராமல் 5 முறை ஜெயில் சென்றவர் என்ற பெருமையும் பெற்ற ஒரே பெண்மணி இந்த மல்லிகா சுப்புராயன் ஆவார். அதே போல, அரவக்குறிச்சி டூ சென்னை வரை கடந்த 1992 ம் ஆண்டு பிரச்சாரம் நடைபயணம் மேற்கொண்டு அ.தி.மு.க வின் ஆட்சியின் சாதனைகளை விலக்கி நடைபயணம் சென்றவரும் ஆவார்.
 
இந்நிலையில் அ.தி.மு.க தலைமை கழகமே முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்த துரோகத்தினை இன்றுவரை நினைத்து பார்த்து, அந்த செந்தில் பாலாஜியை தோற்கடிக்க ஒரு முயற்சி என்றால் இந்த பெண்மணி சரியாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. பெண்மணி என்றும் பாராமல், அ.தி.மு.க விற்காக அரசு வேலையையும் உதறி தள்ளியதோடு, 5 முறை ஜெயில், அரவக்குறிச்சி டூ சென்னை நடைபயணம் மேற்கொண்ட இந்த பெண்மணி மல்லிகா சுப்புராயனுக்கு இந்த முறை அ.தி.மு.க வேட்பாளராக கொடுத்து அழகு பார்த்தால், அனைத்து மக்களும் பாடுபடுவார்கள் என்பது அக்கட்சியினர் மட்டுமில்லாமல் நடுநிலையாளர்களின் கருத்து.
மேலும், பதவிற்காக கட்சி விட்டு கட்சி தாவி வரும் மக்களிடையே ஒரே கட்சியில் இருந்து வரும் மல்லிகா சுப்புராயன் இன்றுவரை ஜெயலலிதாவின் கட்சி தான் எனக்கு இறுதிவரை என்று கடந்த 13 ம் தேதி கரூர் மக்களவை தேர்தலுக்காக கரூர் அடுத்த அரவக்குறிச்சிக்கு பிரச்சாரத்திற்காக வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்த அவருக்கு மல்லிகா சுப்புராயன் சால்வை அணிவிக்க., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்முகத்தோடு வாங்கி சென்றார்.