வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (11:04 IST)

எலும்பை உறைய வைக்கும் கடும் குளிர்! வெளியே வராத மக்கள்! – டெல்லியில் ஒரு வாரம் விடுமுறை!

டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும், குளிர்காற்றும் வீசி வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதீதமான பனி மூட்டத்தால் சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த முறை டெல்லியில் வரலாறு காணாத பனிமூட்டம், குளிர்காற்று நிலவி வருகிறது. வெப்பநிலை 2 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் மக்கள் கடும் குளிரால் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் மற்றும் கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் அந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டே வெளியேற முடியாத நிலையில் உள்ளதால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களிலும் பல பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K