சார் பதிவாளர் அலுவலங்களுக்கு புதிய உத்தரவு !
தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் நிதியாண்டின் இறுதிமாதம் என்பதால் ஆவணங்கள் பதிவுக்கு ஏதுவாக சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை விடுமுறை கால ஆவணப்பதிவிற்காக கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.