திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (18:04 IST)

தமிழ் நாடு கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு- உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களுக்கு வருவோருக்கு சட்டத்தின்படி ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தும்வகையில் உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன்  நரசிம்மன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விசாரணையில், இன்று உயர் நீதிமன்றம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் ஆடைக்காட்டுப்பாடு தொடர்பாக விளம்பரப் பலகைகள் வைக்கவேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது. ஆனால், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் அதற்கான விளம்பரப் பலகைகள் வைக்க வெண்டும் என உத்தரவிட்டுள்ளது.