திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (10:57 IST)

அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை: அரசாணை வெளியீடு

அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனா காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 
அரசாணையின் படி, அரசு அல்லது தனியாரால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி பயின்று, வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள், அந்த இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையில் பணிகளில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு 2வது மற்றும் 3வது முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.