புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (20:04 IST)

நெல்லை பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி கைது!

நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து வருவாய்த் துறை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் 
 
அந்த வகையில் பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி தாளாளர் மற்றும் கழிவறை கட்டிய கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது