Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா?

Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (18:03 IST)
சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவரால் இந்த விஷயத்தில்
வெற்றி பெற முடியவில்லை

கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், அந்த சின்னம் மக்கள் மனதில் பதிய பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக கூறப்பட்டது. எனவே மீண்டும் அதே சின்னத்தை பெற்றால் வெற்றி பெறுவது எளிது என்பதால் அந்த சின்னத்திற்காக அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டார்

இந்த நிலையில் தினகரனை தவிர மீதி 29 சுயேட்சைகள் தொப்பி சின்னத்தை கேட்டதால் குலுக்கல் முறையில் யாருக்கு விழுகிறதோ, அவருக்குத்தான் தொப்பி சின்னம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது

இந்த நிலையில் தொப்பி சின்னத்தை 3 அரசியல் கட்சிகள் கேட்டிருப்பதால் அவர்களில் ஒருவருக்கே தொப்பி சின்னம் என்று தேர்தல் ஆணையம் சற்றுமுன் கூறியது. இதன்படி தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :