Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொப்பி வாங்கிய தினகரன்; சின்னம் கேட்டு தொடந்த வழக்கு தள்ளுபடி

Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (17:49 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் தொப்பி சின்னத்தை சுயேட்சையாக போட்டியிடும் இரண்டு பேர் கேட்டிருப்பதாகவும், குலுக்கல் முறையில்தான் ஒதுக்க முடியும் என்றும் தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.
 
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்ப்பில் கடந்த 1ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில் டிடிவி தினகரன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தொப்பி சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்தது.
 
இதனால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :