வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (18:19 IST)

நாமக்கல்லில் அதிர்ச்சி: ஆசிரியர் அடித்ததில் மாணவன் முளைச்சாவு?

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன் ஆசிரியர் அடித்ததில் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறப்படுகிறது.


 

 
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(12) என்ற மாணவன் திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தான். குடும்ப வறுமை காரணமாக அரசு விடுதியிலே தங்கி படித்து வந்துள்ளான். 
 
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாணவர்கள் மதியம் பள்ளி மைதானத்தில் விளையாடி உள்ளனர். அந்த பள்ளியின் ஆசிரியர் குப்புசாமி என்பவர் மாணவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதாகவும் அப்போது பந்தை அடிக்கும்போது பேட் பறந்து வந்து மாணவன் மீது பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் ஆசிரியர் கிரிக்கெட் மட்டையால் அடித்ததால் மாணவனுக்கு வாயில் ரத்தம் வந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தெளிவாக காரணம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்படுள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளார்கள் என அந்த மாணவனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
 
மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதா? அசிரியர் கிரிக்கெட் மட்டை கொண்டு தாக்கினாரா? அல்லது தற்செயலாக கிரிக்கெட் மட்டை தலையில் பட்டதா? என்பது குறித்து எந்த தெளிவான தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் என் பையன் நல்லபடியா திரும்பி வர வேண்டும். இதுபோல அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என மாணவனின் தாய் கூறியுள்ளார்.