1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (16:31 IST)

கட்சிக்குள் உட்பூசல்: காங்கிரஸால் கர்நாடக அமைச்சரவையில் குழப்பம்!

கர்நாடக தேர்தல் முடிந்ததும் பல குழப்பங்களுக்கு பின்னர் காங்கிரஸ் - மஜக கூட்டணியால் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். ஆனால், இன்னும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. 
 
முதலில் காங்கிரஸ் கட்சியுடன் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை இருப்பதால் அமைச்சரவை உருவாக்கத்தில் காலதாமதம் ஏற்படுவதாக முதல்வர் குமாரசாமி தகவல் தெரிவித்தார். 
 
அதன் பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 22 அமைச்சர் பதவிகள், மஜத கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகள் எனவும், உள்துறை, வீடு, நீர் ஆதாரங்கள், சுங்கவரி, கல்வி, போக்குவரத்து, உடல்நலம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆகியன காங்கிரஸுக்கும், பொதுப்பணி துறை, வருவாய், கூட்டுறவு ஆகியன ம்ஜதவுக்கும் என பிரிக்கப்பட்டது. 
 
நிதி துறையை மஜத கவனிக்க உள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு அமைச்சரவையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். இதுவரை இரண்டு முறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், அப்படி செய்வதால் மூத்த மற்றும் கட்சியின் முக்கியமான நபர்கள் ஒதுக்கப்படுவார்கள். எனவெ இது குறித்து வரும் வாரம் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.