சொத்து வரி செலுத்த கால அவகாசம்: எத்தனை நாட்கள்நீட்டித்தது சென்னை மாநகராட்சி?
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்த நவம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
சென்னை மாநகராட்சியின் கீழ் இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு அரையாண்டு இறுதியில் சொத்து வரி செலுத்த வேண்டும் என்பது சென்னை மாநகராட்சி சட்டம் ஆகும். இந்த நிலையில் இரண்டாம் இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி அக்டோபர் 1ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற நிலையில் நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
மாநகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளம் மூலமோ அல்லது நேரிலோ வங்கிகள் மூலமோ ஸ்மார்ட் செயலிகள் மூலமோ இ-சேவை மையங்கள் மூலமோ வரிகளை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
நவம்பர் 15ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால் 2% வட்டி செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
Edited by Siva