செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:01 IST)

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

கடந்தாண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 
 
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் காரணமாக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தது. 
 
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்தி வைத்த நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 
 
தீர்ப்பின் படி, கடந்தாண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லாது எனவும்  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.