ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (14:39 IST)

செந்தமிழன் சீமான் பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய சீமான்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவருடைய கட்சியினரின் நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை சீமான் தொடங்கியுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஒரு சிலரின் டுவிட்டர் கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியது 
 
 இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவியரசு வைரமுத்து உட்பட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கியுள்ளார். இந்த கணக்கில் தனது முதல் ட்விட்டாக தனக்காக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran