ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (10:12 IST)

என் ட்விட்டர் கணக்கை முடக்கியது மகிழ்ச்சி, சந்தோசம்தான்: சீமான்

என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஒரு சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த தகவலின்படி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெரிவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான் ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran