வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (11:24 IST)

தீபா அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் கட்சி அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதால், அவரது மருத்துவமனை சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதலில் கூறியவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தான். இதனையடுத்து சென்னை திநகரில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். தீபா அவர்கள் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நினைத்தார். ஆனால் தேர்தல் ஆணையத்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு 3 ஆட்டோக்களில் வந்த 15 பேர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த காவலாளியையும் தாக்கியுள்ளனர். தீபா சார்பில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.