1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , புதன், 24 ஏப்ரல் 2024 (15:16 IST)

ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் படப்பை தீ வைத்த மர்ம நபர்கள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதூர் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முத்தையா மகன் முத்து என்பவர் அப்பகுதியில் 7 பால் மாடு வைத்து பால் விற்பனை செய்து வருகிறார்.
 
அவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனமாக வைக்க பொருள் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெருமான 600 கட்டு வைக்க புல் மற்றும் பொருளோடு உதிரி வைக்கப்பில் முத்துவின் வீட்டு அருகில் வைத்திருந்தார் அவர் மீது பொறாமை கொண்ட சிலர் வருது தொழிலை கெடுக்கும் விதமாக மன உளைச்சலை உண்டாக்கும் விதமாக வைக்கோல் கட்டுகளுக்கு தீவைத்து உள்ளனர்.
 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
 
தீ வேகமாக பரவி வருவதை கண்டு கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரு வாகனங்களின் மூலம் இரவு 10 மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி ஆனது காலை 7 மணி வரை நீண்டது இதனால் அருகே வசிப்பவர்களின் வீடுகள் தீயில் சேதம் ஆகாதவாறு தீயணைப்புத் துறையினர் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
 
இது குறித்து பழைய காவல் நிலையத்தில் முத்து புகார் மனு அளித்துள்ளார்.
 
வைக்கோல் கட்டிற்கு தீ வைத்தவர்கள் யார் என்று விசாரணை செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.