1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , புதன், 24 ஏப்ரல் 2024 (15:13 IST)

தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் - பாடலாசிரியர் மதன் கார்த்திக் பங்கேற்பு..

மதுரை மாவட்டம், சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
 
விழாவிற்கு, கல்வி குழும பள்ளிகளின் தலைவர் முனைவர்.செந்தில்குமார், கல்வி குழும பள்ளிகளின் தாளாளர் குமரேஷ், கல்வி குழும பள்ளிகளின் இயக்குனர் செந்தில்
ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
 
இவ்விழாவில், பிரபல பாடல் ஆசிரியரும் எழுத்தாளருமான .மதன் கார்த்தி  சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
 
விழாவில், அமெரிக்கன் பள்ளியின் நிறுவனர்  மோகனலட்சுமி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 
 
இந்த விழாவில், 2023 - 2024   ஆண்டிற்கான கல்வி விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியின் சிறப்பு சுவர் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
முதல்வர் டயானா நன்றியுரை வழங்கினார்.