1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (17:59 IST)

கனிமொழி vs குஷ்பு: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சினிமாதான் காரணமா?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணமா என கனிமொழி மற்றும் குஷ்புவிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய எம்.பி.கனிமொழி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது, பாலியல் கல்வி மிகவும் அவசியம், அதை அரசே கொண்டு வரவேண்டும். 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்ஜ்ய் திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது என தெரிவித்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சினிமாவையும், டாஸ்மாக்கையும் மட்டும் குற்றம்சாட்டாதீர்கள். சமுதாயத்தில் நடக்கும் எல்லா விதமான குற்றங்களுக்கு சினிமா தான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. உங்களிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.