ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (15:31 IST)

குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை முயற்சி

மன்னார்குடியில் வாழ்க்கையின் மீது விரக்தியடைந்த தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வருபவர் தமிழரசி(30). இவரது கணவர் ஆலமுத்து. இவர்களுக்கு சியாம்(11) என்ற மகனும், மனிஷா(9) என்ற மகளும் உள்ளனர். வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற ஆலமுத்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அவரது குடும்பமே உடைந்து போனது.
 
இதனையடுத்து தமிழரசி ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தார். தமிழரசி கிடைத்த வருமானத்தை கொண்டு குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற தமிழரசி குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு அவரும் விஷம் குடித்து விட்டார். 
 
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.