1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 மே 2022 (19:20 IST)

இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை: என்ன காரணம்?

exam
இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்காக 8.37 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் பதிவு செய்ததில் 32 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத வரவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
தேர்வு பயம் காரணமாகவும் கொரோனா வைரஸ் பயம் காரணமாகவும் மற்றும் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் இந்த மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது